ஆன்லைன் சூதாட்டத்தால் நடந்த கொடூரம்..
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், கெரேபிடியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். கார் ஒட்டுநரான இவருக்கு ஸ்வேதா என்ற மனைவி உள்ளார். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் இவர்களுக்கு 13 வயதில் மகள் இருந்தார். இந்த ஆன்ரைன் ரம்மி விளையாட்டிற்கு ஸ்ரீனிவாஸ் அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விளையாடி தன்னிடம் இருந்த பணத்தை இழந்ததும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் பல லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட கடன் நெருக்கடி மற்றும் கடனை கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வீட்டின் முன் பிரச்சனை செய்து வந்துள்ளனர். தம்பதியினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் முட்புலா கிராமத்தில் உள்ள கால்வாயில் தனது 13வயது தூக்கி வீசி கொலை செய்து பின்னர் தம்பதியினரும் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மூவரையும் காணவில்லை என கோரி உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர் கால்வாயில் இருந்து தம்பதி இருவரையும் சடலமாக மீட்டிருக்கின்றனர்.
தொடர்ந்து, தம்பதியின் 13 வயது மகளான நாகஸ்ரீயை கால்வாயின் வழித்தடம் வழியே தேடி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-பவானி கார்த்திக்