ஆள் இல்லாத வீடுகளை டார்கெட் செய்யும் கும்பல்.. வெளியான சிசிடிவி காட்சி..!
சத்தியமங்கலம் தயிர்பள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். விவசாயியான இவர் தோட்டம் வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (புதன்கிழமை) இவரது தோட்டத்து வீட்டிற்கு அருகில் கைக்குழந்தையுடன் கூடிய பெண் உள்பட நான்கு பெண்கள் நடமாடியுள்ளனர்.
உணவு கேட்பது போலவும், பிச்சை எடுப்பது போலவும் அங்கும் இங்கும் சுற்றி திரிந்த அப்பெண்கள், வீடுகளில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு பின்னர் அந்த வீட்டிற்குள் சென்று கைகளில் கிடைக்கும் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். இது கணேசன் வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற பெண்கள் கூட்டம் நடமாடுவதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறும் போலீசார் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”