தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனரான அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவனும் அவரது மனைவி பிரியாவும் பெற்றோராக உள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி முதல் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ராஜா ராணி வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து தேறி,மெர்சல்,பிகில், என்று தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி நடிகர் விஜயின் வியாபாரத்தை பல மடங்கு உயர்த்திய பங்கும் இவர்க்கு இருகிறது. அதை தொடந்து பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானை இயக்கம் வாய்ப்பை பெற்று ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
Happy to announce that we are pregnant need all your blessing and love ❤️❤️
Wit love
Atlee & @priyaatleePc by @mommyshotsbyamrita pic.twitter.com/9br2K6ts77
— atlee (@Atlee_dir) December 16, 2022
இயக்குனர் அட்லீ கடந்த 2014ம் ஆண்டு பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது அவரது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதை தனது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இருவரும் பெற்றோராக இருக்கிறோம் என்ற அறிவிப்பை அடுத்து அவருக்கும் அவரது மனைவிக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.