உச்சகட்டத்தில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்..!! நிலைகுலைந்த எல்லை..! ஐநா வைத்த கோரிக்கை..!!
ஹிஸ்புல்லா அமைப்பினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.. அதற்கு இஸ்ரேல் லெபனான் மீது அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததை தொடர்ந்து இருவரையும் ஐநா பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது..
கடந்த ஒரு வருடமாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடத்தப்பட்டு வரும் இந்த போரானது காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர் முடியாது என இஸ்ரேல் அறிவித்திருந்தது.
அதனை எதிர்த்து காசா மீது அடிக்கடி போர் தொடரும் இஸ்ரேலை எதிர்த்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவர போர் நடத்தப்படும் பகுதிகளில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது..
அதுமட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது., அதில் 3 ஆயிரம் பேர் காயமடைந்த நிலையில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து வடக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டையை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி உட்பட 44 பேர் பரிதாபமக உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் ஹைபா நகரில் தாக்குதல் நடத்தியது அதில் ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தினர்.
அதன் பின்னர் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலில் 2,500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.. இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என நினைத்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர்..
இதுவரையில் லெபனானில் வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது.. இந்த தாக்குதல் ஆனது லெபனான் நாட்டின் எல்லைபகுதியிலும் பெய்ரூட்டிலும் இந்த தாக்குதல்கள் நடதபட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் அரசியல் குழுக்கள் எடுத்துள்ள முடிவின்படி ஹிஸ்புல்லா அமைப்பின் மேற்கொள்ளும் பயங்கரவாத இலக்குகள் பற்றி எந்தவிதமான நம்பகத்தன்மை இல்லை என்றும் ஹிஸ்புல்லா குறித்து சில இரகசிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், தெரிவிதுள்ளது..
எனவே லெபனான் மீது சில குறிபிட்ட பகுதிகளில் மட்டும் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.. இந்த தாக்குதல் ஆனது சில இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாகவும் அந்த இலக்கானது இஸ்ரேலில் இருப்பதால் மக்களின் பாதுகாப்பை நலம் கருதி ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்..
இஸ்ரேலுக்கு விமானப்படையும்., பீரங்கி படையும் உறுதுணையாக இருக்கும் நிலையில் கூட நடத்தப்பட்ட இந்த தரை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மத்திய கிழக்கில் நிலவும் இந்த பிரச்சனையை நிறுத்த இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும்.. என ஐநா கோரிக்கை விடுத்துள்ளது.. ஆனால் இந்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..