பிரபல ரவுடிக்கு என்கவுண்டர் வார்னிங்..!! மாவட்ட ஆட்சிருக்கு சென்ற மனு..!
தனது மகன் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கை காவல்துறையினர் பொய்யாக போட்டு போக்கிலி வசூர் ராஜாவை காவல்துறையினர் என்கவுண்டர் செய்யவுள்ளதாகவும் அதனை தடுக்க கோரி போக்கிலி வசூர் ராஜாவின் தாய் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியை சேர்ந்தவர் போக்கிலி வசூர் ராஜா இவர் மீது ஆட் கடத்தல் வழிப்பறி கொலை மிரட்டல், கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் போக்கிலி வசூர் ராஜா கடந்த ஒன்றரை வருடங்களாக கோவை மத்திய சிறையில் உள்ளார் அவரை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் வேலூருக்கு வழக்கு விசாரணைக்கு அழைத்து வரபடுவார். அப்போது அவருடன் உறவினர் யாரும் கூட பேச முடியாதபடி காவல்துறை பாதுகாப்பு இருப்பதாகவும் இந்த நிலையில் சத்துவாச்சாரி காவல்துறையினர் போக்கிரி வசூர் ராஜா ஆட்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாகவும்
அதனால் தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்கு வசூர் ராஜா தான் காரணம் என கூறி ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளதாக மேலும் போக்கிரி வசூர் ராஜாவை காவல்துறையினர் என் கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறி போக்கிரி வசூர் ராஜாவின் தாய் கலைசெல்வி சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமியிடம் மனு அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..