கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை வருமா..??
நடப்பாண்டில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்பு இல்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு அனைத்து இடங்களிலும் தண்ணீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோடை காலம் என்பதால் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 150 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.