அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு..!! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை டெல்லி ஐகோர்ட் செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டித்தது.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்., அதன் பின் ஜூலை 12-ம் தேதி அமலாக்கத் துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் முடிவடைந்த நிலையில் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார். இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை மீண்டும் ஜூலை 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில், சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து ஜாமீன் கோரியும், வழக்கை அவசர வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்திருந்தார்…
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதேநேரத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக் மற்றும் சிலருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..