உயரம் குறைவால் பிடித்த ஆடையை அணிய முடியவில்லையே, என்று கவலையா..? அப்போ இது உங்களுக்கு தான்.
உயரம் குறைந்த பெண்கள் அன்றாட வாழ்வில் பல சவால்களை எதிர் கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று பிடித்த உடைய அணிய முடியாமல் போவது.
சில ஆடைகள் பார்த்தவுடன் பிடித்து விடும். அதை நமக்கு ஏற்ற அளவில் ( Size ) கிடைப்பது தான் கடினம். சில ஆடைகள் கிடைத்து விடும், சில ஆடைகள் கிடைக்காது.
அதிலும் ஒரு சில ஆடைகளை அணிந்த பின்னும் உயரம் குறைவாகவே காட்டும்.
ஆனால் ஒரு சில ஆடைகளை உடுத்துவதன் மூலம் நம்மை உயர்வாக காட்ட முடியும். அதில் ஒரு சில ஆடைகளை பற்றி பார்க்கலாம்.
நீண்ட குர்தாவுடன் லெகின்ஸ் அணியலாம் அது கால்களை மறைப்பதால், உங்களை உயர்வாகவும், ஒல்லியாகவும் காட்டும்.
ஸ்ப்ளிட் டாப் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும். பலாஸோ பேண்ட் உடன் லாங் டாப் உடுத்தினால் உயர்வாக காட்டும்.
ஜீன்ஸ் உடன் கிராப் டாப் அணியலாம், சற்று குண்டாக இருப்பவர்கள் ஃப்ரீ சைஸ். டீசர்ட்டுகள் அணியலாம்.
பெண்கள் என்றாலே புடவை மீது தான் அதிகம் பிரியம் கொள்ளுவார்கள், என்ன தான் மாடர்ன் உலகில் இருந்தாலும். பாரம்பரிய புடவை என்றாலே அணிய அதிகம் ஆசை படுவார்கள்.
ஆனால் உயரம் குறைந்த பெண்கள் சிலர் பிடித்த சேலையை கட்ட முடியவில்லையே என அதிகம் வருத்தம் கொள்வது உண்டு.
அந்த கவலை நீங்க இப்படி செய்து பாருங்க. புடவைகளை தேர்வு செய்யும் பொழுதே மெலிதான, லைட்வெயிட் புடவைகளை தேர்வு செய்யலாம். அதிக ஸ்டோன் ஒர்க் புடவைகளை எடுத்து கட்டும் பொழுது முந்தானையில் உள்ள வெயிட் உங்களை பின்னே இழுக்கும்.
அதுவே மெலிதான புடவை என்றால் உங்களை இன்னும் அழகாக காட்டும்.
Discussion about this post