விருத்தாசலத்தில் கவுன்சிலரால் ஐந்து வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேலும் வைத்திலிங்கம் பிரைமரி பள்ளிக்கு சீல் வைப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுப்பேட்டை தேசிங்கு ராஜா தெருவை சேர்ந்த ஜோசப் கார் டிரைவர் இவரது மகள் ஐந்து வயது சிறுமி விருத்தாசலம் சக்தி நகரில் உள்ள வைத்தியலிங்கம் ப்ரைமரி நர்சரிப்பள்ளியில் யுகேஜி படித்து வந்தார் பள்ளி மாணவியை கடந்த 11ஆம் தேதி பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய மாணவி பிறப்புறுப்பில் வலிப்பதாக கூறியுள்ளார் இதனை அறிந்த அவருடைய தந்தை மற்றும் தாய் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து அவரது தாய் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போக்சோவில் விருத்தாசலம் 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரிசாமியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர் இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் உத்தரவு பேரில் பக்கிரிசாமி மீது குண்டர் தடுப்பு பிரிவில் கைது செய்ய கோரி உத்தரவிட்டார்.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை செய்வதற்காக டெல்லியில் இருந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக்குழு உறுப்பினர் ஆனந்த் விசாரணை செய்ய வந்தார் அப்போது விருத்தாசலத்தில் சக்தி நகரில் உள்ள வைத்தியலிங்கம் பிரைமரி பள்ளியில் ஆய்வு செய்து அந்த பள்ளிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார் அதன் பேரில் விருத்தாச்சலம் வருவாய்த்துறையினர் அந்தப் பள்ளிக்கு சீல் வைத்தனர் பின்னர் குழந்தையின் தாய் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டார்.
Discussion about this post