நீங்க ஒரு மேக்கப் பிரியரா இருந்தா..? கட்டாயம் இதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
பெண்கள் என்றாலே எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இயற்கை அழகை விரும்புபவர்களும் உண்டு, செயற்கை அழகை ரசிப்பவர்களும் உண்டு.
அப்படி நாம், முகத்தில் போடப்படும் சில மேக்கப்பில் ஆபத்து இருக்கிறது என்றால்? சருமப் பிரச்னைகள் மட்டுமின்றி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
சரும ஒவ்வாமை : மேக்கப் போடுவதால் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படும். சில நிறுவனங்கள் ரசாயன பொருட்களை அதிகம் கலப்பதால், அதை நம் முகத்தில் பூசும் பொழுது முக அரிப்பு, மற்றும் முகத்தில் தடிப்பு ஏற்படும். குறிப்பாக மென்மையான சருமம் உள்ளவர்களுக்கு கட்டாயம் ஒவ்வாமை ஏற்படும்.
கண் பாதிப்பு : கண் முடிகளில் போடப்படும் மஸ்காரா, பயன் படுத்தும் பொழுது தான் மிக அதிக கவனம் தேவை. காரணம் கண்ணின் முடி வரிசையில் பாக்ட்ரியா கிருமிகள் அதிகம் இருக்கும், இதனால் நோய் தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படும். எனவே மஸ்கராவை அளவுக்கு அதிகமாக பயன் படுத்துவதை தவிர்த்து. அளவுடன் பயன்படுத்தலாம்.
சருமம் : தினசரியாக தொடர்ந்து மேக்கப் போடுவதால், அதிலுள்ள ரசாயன துகள்கள், முகத்தில் உள்ள சரும துளைகளை அடைத்து விடும். இதனால் சருமத்திற்கு காற்று செல்லாமல், தடிப்பு, பரு போன்றவை ஏற்படும்.
இல்லையேல் சருமத்திற்கு ஏற்ற மேக்கப் பொருட்களை பயன்படுத்தலாம்.
Discussion about this post