ஏர்டெல் தனது புதிய வரம்பற்ற 5ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை இந்தியாவில் அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் அனைத்துமே 499-ல் இருந்து தொடங்குகிறது. கூடுதல் ஜாக்பாட்டா அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற OTT சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது.
₹499 திட்டம்:
28 நாட்களுக்கு, ஏர்டெல்லின் சமீபத்திய திட்டமானது அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 டெய்லி எஸ்எம்எஸ் உடன் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் யூஸர்கள்3 மாதத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன், Xtream பயன்பாட்டு நன்மைகள், Wynk சப்ஸ்கிரிப்ஷன்உள்ளிட்ட நன்மைகளை பெறலாம்.
₹839 திட்டம்:
ஏர்டெல்லின் 84 நாள் திட்டமானது இது அன்லிமிடெட் 5G டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. சந்தாதாரர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத சந்தாவையும், Xstream ஆப்ஸ், RewardsMini சந்தா, Wynk சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் பல நன்மைகளுடன் அனுபவிக்க முடியும். உங்கள் பகுதியில் 5ஜி சேவைகள் கிடைக்கவில்லை என்றால், தினசரி 2ஜிபி அளவுடன் வரம்பற்ற 4ஜி டேட்டாவை இந்தத் திட்டம் வழங்குகிறது.
₹699 திட்டம்:
ஏர்டெல்லின் 56 நாட்கள் வேலிடிட்டி பேக்கேஜ் ஆனது இது பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, சந்தாதாரர்கள் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை 56 நாட்கள் அனுபவிக்க முடியும், அத்துடன் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸ் பலன்கள், Wynk சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் பலவற்றையும் அனுபவிக்க முடியும். 5ஜி சேவைகளை அணுகாதவர்களுக்கு, தினசரி 3ஜிபி அளவுடன் வரம்பற்ற 4ஜி டேட்டாவை இந்த திட்டம் வழங்குகிறது.
₹999 திட்டம்:
84 நாட்கள் செல்லுபடியாகும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு Wynk சப்ஸ்கிரிப்ஷன் 5G டேட்டா, Wynk சப்ஸ்கிரிப்ஷன் அழைப்பு மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, சந்தாதாரர்கள் Xtream ஆப்ஸ் பலன்கள், Wink சந்தா, RewardsMini சந்தா மற்றும் பலவற்றுடன் Amazon Prime மெம்பர்ஷிப்பை 84 நாட்களுக்கு அனுபவிக்க முடியும். ஏர்டெல் 5ஜி நகரத்தில் இல்லாதவர்களுக்கு, இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி அளவுடன் வரம்பற்ற 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
Discussion about this post