ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்..? கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்..!
ரயில் பயணத்தை விரும்பாதவர்களும் , அதை பயணிக் காதவர்களும் குறைவு தான். அதுவும் ஜன்னல் ஒர பயணம் என்றால் அதை அனைவரும் விரும்புவார்கள்.
அப்படி நாம் தொலை தூரம் பயணம் செல்லும் போது, அந்த பயணச்சீட்டை வைத்து மேலும் இரண்டு நாட்கள் கூடுதலாக பயணம் செய்யலாம் . அது எப்படி தெரியுமா..?
நாம் செல்லும் பயணம் 500கி.மி க்கு மேல் இருக்க வேண்டும். எடுத்த பின் எந்த ஸ்டேஷனில் இறங்கு கிறோமோ அந்த இரயில் நிலையத்தில் உள்ள அலுவலரிடம் தேதி மற்றும் கையொப்பம் பெற்று கொள்ள வேண்டும்.
மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து அதே பயணச் சீட்டில் அதற்கு மேல் பயணிக்க முடியும். இதை பிரேக் ஜார்னி என்று சொல்லுவார்கள்.
உதாரணமாக : ஒருவர் சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார் என்றால் 500கி.மி க்கு மேல் உள்ள நாக்பூர், அல்லது போபாலில் இறங்கி இரண்டு நாட்கள் கழித்து கூட டெல்லி செல்லலாம். ஆனால் இதில் சில விதிமுறை களும் அடங்கும்.
டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு செல்பவர்கள், இதை பயன்படுத்திக் கொள்ள முடியாது. ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் இதை மேற்கொள்ள முடியாது. அப்படி மீறி பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
Discussion about this post