மணிப்பூர் உயர்நீதிமன்றதின் புதிய நீதிபதி நியமனம்…!! கொலிஜியம் அறிவிப்பு…!!
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள கலவரத்தால் இதுவரையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில் ஆயிரம் கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடிபெயர்ந்துள்ளனர். இச்சூழலில் அங்கு விமான தாக்குதல்கள் மற்றும் ராக்கெட் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வருகின்ற 21ம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. மேலும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக NIA விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..