மாநிலங்களின் நிதி உரிமைகளை மீட்கும் கூட்டம்..!! துணை முதலமைச்சர் உதயநிதி பதிவு..!!
தமிழ்நாட்டில் 4 நாள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா வருகை தந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இன்று 16-வது நிதிக்கமிஷன் குழுவுடன் ஆன ஆலோசனை இன்று தொடங்கியுள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பல முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒரு மாநிலத்திற்கு உள்ளது என்றும், 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநில வரி வருவாய் பங்கை 41 விழுக்காடாக உயர்த்தி இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் ஒன்றிய அரசு 33.16 விழுக்காடு மட்டுமே பகிர்ந்துள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர் ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை அதிகரித்து இருப்பதாகவும், தமிழகத்தில் உள்ளதை போல ஒன்றிய வருவாய்வில் மாநிலத்துக்கு வரி பகிர்வு 50%-ஆக உயர்த்த வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு 50 சதவீதமாக ஆணையக்குழு உறுதி செய்திட வேண்டும் எனவும் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடிருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அதில் அவர் குறிப்பிட்டிருபதாவது, தமிழ்நாடு மட்டுமே அதிக வரி செலுத்தும் மாநிலமாக இருப்பதால் ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் 50% மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார், மேலும் நிதி உரிமைக்கான குரல் எழுப்புவதில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் மாநிலங்களின் நிதி உரிமைகளை மீட்கும் கூட்டமாக இந்த கூட்டம் அடித்தளமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..