கழுத்து கருமை போக்க அருமையான டிப்ஸ்..!! பயன்படுத்தி பாருங்க…!
பெண்கள் மற்றும் ஆண்கள் என பலருக்கும் கழுத்து கருமையாக இருக்கும் பிரச்சனை இருக்கிறது. கழுத்து கருமையாக இருக்க முக்கிய காரணம் நாம் சரியாக பராமரிக்காமல் இருப்பதே, இது சிலருக்கு மிக அடர்த்தி நிறைந்ததாக இருக்கும்.
இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..
கழுத்து கருமைக்கு பாசிப்பயிறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கழுத்து கருமை நீங்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. பாசிப்பயிரை கொஞ்சம் எடுத்து அதனைஅரைத்து கழுத்தில் தடவி வந்தால் கருமை குறையும்.
முதலில் கழுத்தை சுற்றி தயிர் தடவி 20 நிமிடம் விட்டு கழுவி விட வேண்டும்.
பாசிப்பயிறு மாவுடன் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தடவி வந்தால் கழுத்து கருமை குறையும்.
பின் தக்காளியை இரண்டாக நறுக்கி மஞ்சள் தேய்த்து கழுத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 2 டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கடலை மாவுடன், கால் டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை கருமையான இடத்தில் கழுத்தை சுற்றி நன்கு தடவிக் கொள்ளவும்.
பின்பு எலுமிச்சை சாறு கொண்டு நன்றாக தேய்த்து பிறகு துடைத்து எடுத்துவிடுங்கள். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கருமை நிறம் நீங்கி சருமம் பொலிவாக காணப்படும்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)