தமிழ்நாடு அரசு பணி தேர்வாணயத்தின் புதிய தலைவர்..?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி (TNPSC) புதிய தலைவராக வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வந்த எஸ்.கே.பிரபாகர் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்..
தமிழ்நாடு அரசின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.. அதனை அடுத்து பிரத்யேகமான அரசாணையையும் வெளியிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு பிரிவில் கடந்த மாதம் பிப்ரவரி 9ம் தேதி புதிதாக 9 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தலைவர் மட்டும் நியமனம் செய்யப்படாமல் இருந்ததால் பல்வேறு கேள்விகள் எழுப்பட்டது…
இந்நிலையில் தற்போது.., TNPSC தேர்வானையத்தின் தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசு பரிந்துரைத்த செய்யப்பட்ட டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை ஆளுநர் ரவி பரிசீலிக்காமல் இருந்துள்ளார்.
அதே சமயம் நியமனம் செய்ய வேண்டிய தலைவரின் பெயரை.. அது குறித்த சில விளக்கங்களையும் தமிழக அரசிடம் கேட்டிருப்பதாகவும் ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி டி.என்.பி.எஸ்.சியின் அமைப்பு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் 13 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
அவர்கள் மத்திய மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்ட பின், அவர் ஆளுநரால் நியமனம் செய்யப்படுவார். கடந்த 1989-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர், பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயதை அடையும் வரை பதவி வகிப்பார். இதன் மூலம் TNPSC தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர் 2028 ஜனவரி மாதம் இறுதி வரை பதவி வகிப்பார் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..