மீண்டும் ஒரு மருத்துவ பயிற்சியாளர்..!! அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர்..!! பரபரப்பான கோவை..!!
கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள “ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்” இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவரிடம் பாலியல் வன்கொடுமை செய்து., அந்த மருத்துவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.. கோவை அரசு மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஆகஸ்ட் 14ம் தேதி மாலை கார் பார்க்கிங்கில் இருந்த தன்னுடைய வாகனத்தை எடுக்க சென்றுள்ளார்.. அப்போது அங்கு திடீரென வந்த இளைஞர் அந்த பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்..
இதைப் பார்த்து அச்சமடைந்த பெண் மருத்துவர் சத்தம்போட்டுள்ளார். அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கு பாதுகாவலர்கள் வருவதை கண்ட இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. புகாரின் அடிப்படையில் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..