பிரபல யுடியூபர் பிரியாணி மேன் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு..!!
பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் அபிஷேக் ரபி மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபிஷேக் ரபி என்கிற வாலிபர் பிரியாணி மேன் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார்.. அதில் பிரபல யூடியூபரான இர்ஃபானை பிரியாணி மேன் அவதூறாக பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதேபோல் டெய்லர் அக்கா என்கிற யூடியூப் சேனலில் பெண் ஒருவர் டெய்லரிங் குறித்த விஷயங்களை வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.
அதில் பிளவுஸ் தைத்து கொடுப்பதை அந்த பெண் வெளியிட்டிருந்த வீடியோவை பிரியாணி மேன் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பெண்ணை மட்டுமின்றி பல பெண்களை தரக்குறைவாக பேசுவது., விமர்சிப்பது, ஆபாச வார்த்தைகளால் திட்டுவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.,
இந்நிலையில் செம்மொழிப் பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாக சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்போது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிறையில் உள்ள அபிஷேக் ரபி மற்றொரு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், அபிஷேக் ரபியை கைது செய்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..