தொடரும் நகைப்பறிப்பு..! மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு..!!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சுமித்திரா (43) இவர் விருத்தாச்சலம் சாலையில் சூரக்குழி கிராமம் பஸ் நிறுத்தம் அருகே வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல அவரது கடையில் அமர்ந்து வியாபாரத்தை பார்த்துள்ளார். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 2நபர்களில் 1 நபர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு மற்றொருவர் சுமித்ரா கடைக்குச் சென்று சிகரெட் கேட்டுள்ளார்.
சுமித்ரா சிகரெட் எடுத்து கொடுக்கும் சிறிது நேரத்தில் சிகரெட் வாங்க வந்த வாலிபர் சுமித்ரா அணிந்திருந்த தாலி செயினை பறித்துக்கொண்டு 2 நபர்களும் சூரக்குழியில் இருந்து ஆண்டிமடம் நோக்கி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சுமித்ரா தாலி செயின், தாலி, குண்டு, காசு, உட்பட மொத்தம் 5பவுன் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுமித்ரா ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து போலீசார் அந்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெட்டிக்கடையில் இருந்தவரிடம் செயின்பறித்துச் சென்றது அப்பகுதியின் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..