அண்ணாமலையின் ஆணவ பேச்சால் கடுப்பான.. பாஜக தலைமை..! அண்ணாமலையின் ராஜினாமா..! அடுத்த பாஜக தலைவர் இவரா..?
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வி பெற்றதற்கு காரணம் பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என பாஜகவின் மூத்த தலைவர்கள் எழுப்பிய விமர்சனத்தால் அண்ணாமலை ராஜினாமா செய்வதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காததால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதனால் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.
பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள நிதிஷ்குமார் யாதவ், சந்திரபாபு நாயுடு மீது பாஜவுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்து வருகிறது. ஏனென்றால் எந்த நேரத்திலும் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆட்சியை களைத்து கொண்டு செல்லும் நிலை ஏற்படும் என்ற பயம் பாஜகவிடம் அதிகமாகியுள்ளது என சொல்லாம்.
அதே சமயம் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் சில தொகுதிகளை வெற்றி பெற்று இருக்கலாம். அதிமுக வெற்றி பெற்று இருந்தால் கடைசி வரை நமக்கு நம்பிக்கையாக இருந்து இருப்பார்கள் என பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை மக்களவை தேர்தலில் பாஜக தோல்வி அடைய காரணம் பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த சில தவறான முடிவு தான் காரணம் என பாஜக மேலிடம் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்துள்ளது. அதிமுக கூட்டணியும் பிரிந்துக்கொள்ள முக்கிய காரணமே அண்ணாமலையின் தேவையில்லாத அந்த வாய் பேச்சு தான் காரணம் என பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது.
கட்சியின் பெயரை தாங்கியிருக்கக்கூடிய அண்ணாவையும், ஜெயலலிதா போன்ற சிறந்த தலைவர்களை அவதூறாக பேசியதால் அதிமுக இனி பாஜகவுடன் கூட்டணி தேவையில்லை என முறித்து கொண்டு சென்றது.. அதை பற்றி அண்ணாமலை வருத்தம் கொள்ளவில்லை, தலைவர்களை பற்றி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பும் கேட்கவில்லை. அண்ணாமலையின் இந்த ஆணவ பேச்சால் தான் தமிழகத்தில் பாஜக தமிழகத்தில் தோற்றதற்கு காரணம் என டெல்லி மேலிடம் கடும் கோபத்தை தெரிவித்துள்ளது.
அதே சமயம் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி, பாமக, தமாகா, அமமுக, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தும் கூட தோல்வியை தான் சந்திக்க நேரிட்டது.
மற்ற தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் டெபாசிட் இழந்தது. ஆனால் பாஜக தனித்து கூட போட்டியிடவில்லை. அதே சமயம் மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற பாமக மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்களை கூட்டணியில் போட்டியிட்டு கூடும் தமிழகத்தில் 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
இது பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. அதனை நிருபிக்கும் வகையில் மக்களவை தேர்தல் தோல்விக்கு, கூட்டணி தொடர்பாக அண்ணாமலை எடுத்த அந்த அவசர முடிவு தான் காரணம் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தான் காரணம் என வெளிப்படையாக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அது பெரும் சர்ச்சையாக முடிந்துள்ளது.
அதையடுத்து தமிழகத்தில் பாஜக தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலை தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதே சமயம் சர்வதேச அரசியல் படிப்பை லண்டன் சென்று படிக்க போவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் கடந்த 1, 2ம் தேதி முகாமிட்டு இருந்த அண்ணாமலை பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அண்ணாமலையை சந்திக்க இரண்டு பேரும் நேரம் ஒதுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்துள்ளார்.
கடைசியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து நான் ஏற்கனவே அளித்துள்ள என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளும் படி வலியுறுத்தினார். அதன் பின் பாஜக அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்தித்து அண்ணாமலை ராஜினாமா கடிதம் குறித்து பேசியுள்ளார்.
இதுபற்றி பாஜக மேலிடம் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளது.. அப்போது அவர்கள் பேசியதாவது., “பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டால்” புதிய தலைவராக யார் நியமனம் செய்ய முடியும்..? ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் கட்சியின் மிக பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். எனவே, தொடர்ச்சியாக கொங்கு மண்டலத்திற்கு பொறுப்புகள் வழங்க வேண்டாம்.
இந்த முறை தென்மாவட்டத்தில் இருந்து தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். அதேசமயம் தென்மாவட்டத்தில் உள்ள பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தலைவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் மீண்டும் தலைவராக நியமனம் செய்ய வாய்ப்பில்லை. அதே நேரத்தில் சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரனை தலைவராக நியமிக்கலாமா..? என்று பாஜக மேலிடம் கேட்டுள்ளது..
அதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் முழு ஆதரவு கொடுத்துள்ளார். மேலும் பாஜக வெளிநாட்டுப் பிரிவு துணைத் தலைவராக உள்ள தென்காசியை சேர்ந்த ஆனந்தன் பெயரும் தலைவர் பதவிக்கு அடிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..