அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு..! செல்வப்பெருந்தகை குறித்து அண்ணாமலை விமர்சனம்..!
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அண்ணாமலை சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கடந்த ஜூலை 9ம் தேதி பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது., “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக செல்வப்பெருந்தகை மிகவும் வருத்தப்படுகிறார்.
செல்வப்பெருந்தகை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் :
* ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி
* 2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)
* 2003 வழக்கு எண் 136/2003 இபிகோ 307 – கொலை முயற்சி
* 2003 வழக்கு எண் 138/2003 – தாக்குதல்
* 2003 வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்..
* 2003 வழக்கு எண் 451/2003 இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்..
கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள் அவர் மீது உள்ளது என பதிவிட்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர், மதுரையில் காங்கிரஸ் கட்சியை மதுரை மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர், வீ.கார்த்திகேயன். சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அண்ணாமலையின் படத்தை கிழித்தும், மேலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த அண்ணாமலை உருவபொம்மையை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தி நெருப்பை அனைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..