அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..
லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவலை 15 நாட்கள் நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல்துறை கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கைது செய்தனா்.
இதையடுத்து, அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய விவகாரத்தில், திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவலை 15 நாட்கள் நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி மேனகா உத்தரவிட்டுள்ளார்.
