கல்லூரி பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிய கல்லூரி மாணவிகள் பலத்த காயம்..
திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தில் கல்லூரி பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.
திருப்பூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கல்லூரி பேருந்து ஒன்று ஊத்துக்குளி ரோடு பெரியபாளையம் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கல்லூரி பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மாணவிகளை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
