131 மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ஆனந்தம் இளைஞர்கள் நல அமைப்பு..!!
இயல்பாகவே ஒரு சில உள்ளங்களுக்கு உதவும் எண்ணம் இருக்கும்.., ஒரு சிலர் உதவுவதற்காகவே பிறந்திருப்பார்கள். ஒரு சிலர் குழு வைத்து கஷ்ட படுபவர்களை தேர்வு செய்து உதவுவார்கள்.. அப்படி எப்பொழுதும் உதவி கொண்டு இருக்கும் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட அமைப்பை கொண்டவர்களை பற்றி பார்க்காலம்.
சென்னயில் ஆனந்தம் இளைஞர்கள் நல அமைப்பு செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் இருந்து மேற் படிப்பு படிப்பதற்கு பணம் இல்லாமல் தவிக்கும் மாணவர்களை தேர்வு செய்து படிக்க வைக்க இக்குழு திட்டமிட்டுள்ளது.
அதற்காக 3221 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் பின்னனி அறிந்து 131 மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். அதற்காக ஒரு நேர்முக தேர்வு நடத்தப் பட்டது. அதில் கலந்து கொண்டு பல மாணவர்களுக்கு தந்தை இல்லை என்பதை தெரிவித்துள்ளனர்.
அதற்கு பின்னால் எவ்வளவு வலியும், வேதனையும் இருக்கும் என்பதை நேர்முக தேர்வில் உணர முடிந்தது. அதில் கலந்து கொண்ட ஒரு மாணவிக்கு தந்தை இல்லை, இரண்டு சகோதரிகளுடன் பிறந்த அந்த மாணவிக்கு, தாய் மட்டுமே கூலி வேலைக்கு சென்று 3 பெண் பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார்.
தினமும் 18 மணி நேரம் வாரத்தில் ஏழு நாளும் உழைக்கும் தாய்க்கு.., நான் படித்து இன்ஜினியராகி தாயின் விருப்பத்தை நிறைவேற்ற ஆசை பட்டுள்ளார். மூத்த பெண் பிள்ளையாக இருக்கும் அந்த மாணவி
கட்-ஆப் போக நல்ல மார்க் எடுத்து இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் இன்ஜினியரிங் கனவிற்கு மாணவியின் ஏழ்மை ஒரு தடையாக உள்ளது.., என்பது வேதனைக்குரியது. இன்ஜினியரிங் படிப்பதற்கு 4 லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிந்ததும் உடைந்த போன மாணவிக்கும், மாணவியின் குடும்பத்திற்கும்.
நம்பிக்கை கொடுத்து உதவும் விதமாக ஆனந்தம் இளைஞர்கள் நல அமைப்பு உதவ முன் வந்தது. அந்த மாணவி ஆசைப்பட்ட படியே இன்ஜினியரிங் படிக்க வைக்கவும், தமிழ்நாட்டில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் மாணவியை படிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
நான்கு வருட இன்ஜினியரிங் படிப்பிற்கான பணமும், ஹாஸ்டல், போக்குவரத்து என அனைத்திற்கும் ஆனந்த் செயற்குழு அமைப்பு உதவி செய்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்த மாணவி.
கல்வி ஒன்று மட்டும் தான்.., நம் எதிர்காலத்தை உருவாக்கும். இன்று எனக்கு மற்றவர்கள் உதவுவது போல் படித்து முடித்து, ஒரு நல்ல வேலைக்கு சென்று மற்றவர்களுக்கு உதவுவேன் என்று கூறியுள்ளார்.
இந்த மாணவி மட்டுமின்றி 131 மாணவர்களின் படிப்பிற்கு ஆனந்தம் இளைஞர்கள் நல அமைப்பு உதவியுள்ளது.., இவர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடருந்து படித்திடுங்கள்..
Discussion about this post