பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணம்..! பங்கேற்ற பிரபலங்கள்..?
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் .5,000 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் உலக அளவில் இருந்து தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கான், ஷாரூக்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா, அத்வானி, சன்னி தியோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். டபிள்யூ டபிள்யூஎப் (WWF) குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் சீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்தையொட்டி அம்பானி குடும்பத்தினர் கடந்த ஜூன் 29ம் தேதியில் இருந்து குஜராத் முறைப்படி திருமண சடங்குகளை செய்து வருகின்றனர். திருமண நிகழ்வின் ஒரு பகுதியாகஆனந்த் அம்பானி சார்பில் 50 பேருக்கு இலவச திருமணம் செய்து வைத்தனர்.
இதுதவிர, மும்பையில் தொடர்ந்து 40 நாட்களாக விருந்து அளித்து வருகின்றனர். ஆனந்த் அம்பானியின் இந்த திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது அம்பானியின் சொத்து மதிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த செலவில் 10 ஆஸ்கர் நிகழ்ச்சிகள் நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
– லோகேஸ்வரி.வெ