நீரில் மூழ்கி 8 வயது சிறுமி பலி..! சோகத்தில் திருப்பத்தூர் மாவட்டம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, தமிழ்நாட்டிற்கும் ஆந்திராவிற்கும் அருகேயுள்ள எல்லையில் கனக நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது . அங்கு புல்லூர் தடுப்பணை இருக்கிறது. ஆற்றில் விளையாட சென்ற பொழுது பத்மஜா என்ற 8 வயது சிறுமி ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.
நீச்சல் தெரியாத அந்த சிறுமி உதவிகாக நீண்ட நேரம் போராடி இருக்கிறார்.., அந்த சமையத்தில் அங்கு யாரும் இல்லாததால் நீரில் மூழ்கி இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமியை காணாததால் சிறுமியை தேடி.., சிறுமியின் பெற்றோர்கள் அங்கு வந்துள்ளனர்.
சடலமை நீரில் குழந்தை மிதப்பதை பார்த்த பெற்றோர் நீரில் சென்று குழந்தையை தூக்கி கரைக்கு வந்துள்ளனர்.., ஆனால் குழந்தை நீரில் மூழ்கி இறந்துள்ளார்.. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆந்திரமாநில குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். பின் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த முத்துவேல் குடும்பத்தினருடன் புல்லூர் பகுதியில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது குழந்தை நீரில் மூழ்கி பலியானது தெரிய வந்தது.