திருவண்ணாமலை ஆனி பவுர்ணமி கிரிவலம் தேதி அறிவிப்பு..!!
திருவண்ணாமலை மலையை சிவனாக நினைக்கும் பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் சென்று வழிபடுவார்கள்.., அந்த நாளில் மட்டும் திருவண்ணாமலையில் லட்சம் கணக்காக பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
இந்த மாதம் ஆனி பவுர்ணமியான நாளை (ஜூலை 2ம் தேதி) கிரிவலம் செல்ல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7:46 மணி முதல் மறுநாள் மாலை 5:49 மணி வரை கிரிவலம் செல்லலாம்.. பவுர்ணமி செல்ல இந்த நேரம் தான் சரியான நேரம் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது..
பவுர்ணமி கிரிவலம் முடிந்ததும் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
கிரிவலம் செய்ய வயதனாவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது, அதற்கு காரணம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இரவு முதல் மறுநாள் மாலை வரை நடக்க வேண்டியிருக்கும்.
அவர்கள் செல்லும் பாதையில் மருத்துவ வசதிகள் எடுத்துவும் கிடையாது என்பதால்.., கர்ப்பிணி பெண்கள் செல்ல தடை விதித்துள்ளது.