குரங்கம்மை நோய் பாதிப்பு..!! தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!!
குரங்கம்மை நோய் பாதிப்பு இதுவரை இந்தியாவில் எதுவும் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை நோய் தொற்றானது உலக நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது., அதற்கான முழுவீச்சில் தமிழ்நாடு செய்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் குரங்கம்மை நோய் சிகிச்சைகாக அமைக்கப்பட்டுள்ள தனி சிறப்பு வார்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
உலக நாடுகளில் அதிவேகம் எடுத்திருக்கும் குரங்கம்மை நோய் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.. அதற்காக திருச்சி, கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது . குரங்கம்மை நோய் குறித்து பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
பன்னாட்டு விமான பயணிகள், தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகத்திற்கு வரும் போது குரங்கம்மை குறித்து சோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதிக்க படுகிறார்கள். இதுவரை குரங்கம்மை நோயினால் 223 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இதுவரைக்கும் எதுவும் இல்லை.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குரங்கம்மை நோய்காக தனி வார்டுகள்., 10 படுக்கைகள் கொண்ட குரங்கம்மை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குரங்கம்மை நோயை கண்டறிவதற்காக பல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் மட்டுமின்றி விமான நிலையங்களில் கூட பல சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாரவது குரங்கம்மையால் பாதிக்கப்பட்டால் அதற்கான முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோய் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் தொடங்கப்பட்டுள்ளது அதில் 200 பேர் வரை டெஸ்ட் செய்துக்கொள்ள முடியும்., டெங்கு காய்ச்சல் தற்போது வரை கட்டுக்குள் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் டெங்கு உயிரிழப்பு 5, 6 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் போது அதன் எதிரொலியாக இந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, டெங்கு பாதிப்பு குறித்து மக்கள் பயப்பட வேண்டாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..