நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கால்நடைகளை மேய்ச்சல் செய்து வாழ்வாதாரம் நடத்தி வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தனிமையில் வசித்து வரும் மூதாட்டிகள் கொலை சம்பவம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள்.,கணவர் இறந்த நிலையில் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சல் செய்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதியை சேர்ந்த உறவினர் மூதாட்டி பழனியம்மாளை பார்க்க சென்றபோது மூதாட்டி நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல்கள் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் மற்றும் திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமி ஆகியோர் மூதாட்டி பழனியம்மாள் காது அறுக்கப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த பின்பு சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு மற்றும் ஆட்டுகொட்டகையில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து மோப்ப நாய் செபி வரவழைத்து கொலை நிகழ்ந்த இடத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்றதன் அடிப்படையிலும் மாவட்ட எஸ்பி உத்தரவின்படி தனிப்பட்டை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போன்று கடந்த மாதம் தனிமையில் இருந்த மூதாட்டி கரும்புக்காட்டில் கழுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வரும் நிலையில் கால்நடைகளை மேய்ச்சல் செய்து தனிமையில் வசித்து வரும் மூதாட்டி பழனியம்மாள் கொலை செய்யப்பட்டதற்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் தனிமையில் உள்ள மூதாட்டி கொலை செய்யபட்டு வரும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் முதியோர் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்யும் வகையில் தனிமையில் உள்ள முதியோருக்கான போலீசார் தனிபிரிவை காவல்துறை அமுல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Discussion about this post