மணிப்பூர் காவல்துறைக்கு எதிராக குற்றம்சாட்டு..!! களத்தில் இறங்கிய சிபிஐ..!!
மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மணிப்பூரில் குக்கி மெய்தி பழங்குடியின சமூத்தினர் இடையே இருந்து வந்த மோதல்கள் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது.
இதில், ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.
குக்கி பழங்குடியின இளம் பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான புகாரை விசாரித்த மணிப்பூர் காவல்துறை 7 பேரை கைது செய்தது.. இந்த நிலையில், மணிப்பூர் காவல்துறைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
குற்றப்பத்திரிக்கையில் 6 பேர் மீது கூட்டு வன்புணர்வு, கலவரம், கொலை, கடத்தல், குற்றச்சதி ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு எதிராக உரிய ஆதாரங்களுடன் சிறார் நீதி வாரியத்தில் தனி அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாலியல் வன்புணர்வின் ஈடுபட்ட மேலும் பலரை தாங்கள் அடையாளம் காட்டியும் வெறும் 7 பேர் மீது மட்டுமே சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..