ADVERTISEMENT
கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு…
திருவண்ணாமலையில் அலுவலகம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை காந்தி நகர் பழைய பைபாஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் சேட்டு. இவரது கார் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காரில் இருந்து திடீரென தீ பற்றி எறிய துவங்கியது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும் அந்த கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
மேலும், இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காரில் உள்ள பேட்டரி ஒயர்களை எலி கடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
