மது பழக்கம் வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்பதில் மாற்றமில்லை. இது மது குடிப்பதை ஊக்குவிப்பதற்கான செய்தி அல்ல… மது குடிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பற்றிய செய்தி மட்டுமே.
மிதமான பீர் குடிப்பவர்களுக்கு கரோனரி தமனி நோய் போன்ற இதய நோய்க்கான ஆபத்து 20 முதல் 40% குறைவாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பீரில் உள்ள ஹாப்ஸ் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளை செல்களை ஆக்ஸிஜனேற்றத்திலிருந்து பாதுகாக்கின்றன. அவை அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. பீரில் இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
அதிகப்படியான குடிப்பழக்கம் உணவுக் குழாய் புற்றுநோய், சிரோசிஸ் மற்றும் சில கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால் மிதமான குடிப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறைவான ஆல்கஹால் கொண்ட பீர் மிதமான அளவில் குடிப்பவர்கள், மதுவைத் தொடாத டீட்டோடேலர்களைக் காட்டிலும் நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பீரில் நார்ச்சத்து மற்றும் லிப்போபுரோட்டீன் கலவைகள் நிறைந்துள்ளன. அவை கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. இதன் விளைவாக, அடிக்கடி பீர் குடிப்பவர்கள் சிறந்த தமனி ஆரோக்கியத்தைப் பெறுகிறார்கள். மற்ற மது பானங்களுடன் ஒப்பிடுகையில், பீரில் குறைந்த அளவு ஆல்கஹால் உள்ளது. பீரில் நான்கு முதல் ஆறு சதவிகிதம் ஆல்கஹால் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post