மிளகாய் பொடி தூவி 60 லட்சம் பணம் கொள்ளை முயற்சியால் பரபரப்பு!!
திருப்பத்தூர் அருகே வங்கியில் செலுத்த கொண்டு சென்ற 60 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் நகர் பகுதியில் கௌசிக் என்பவருக்கு சொந்தமான பிரபல நகை கடையில் கணக்காளராக அஜித்குமார், மற்றும் பரத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நகை கடையில் விற்பனையான பணம் 60 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு புதுப்பேட்டை ரோடு செல்லும் சாலையில் அமைந்துள்ள வங்கியில் செலுத்த சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்து அஜித் குமார் மற்றும் பரத் ஆகியோர் மீது மிளகாய் பொடி தூவி பணத்தை பறிக்க முயற்சித்துள்ளனர்.
அதற்குள் சுதாரித்துக் கொண்ட இருவரும் பணத்தை இருக்க பிடித்துக் கொண்டதன் காரணமாக அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவியதன் காரணமாக அஜித்குமார் மற்றும் பரத் ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post