சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்!!
மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காமல் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையானது தற்போது குண்டும் குழியுமாகவும், மழை நீர் தேங்கி சேரும் சகதியமாக காணப்படுகிறது.
இந்த கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளியனூரில் உள்ள பள்ளி மற்றும் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல இந்த சாலையை கடந்து செல்ல வேண்டியதால் மிகவும் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் சாலையில் நாற்று நடவு நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.