குண்டர் சட்டத்தில் கைதான விவசாயிகளுக்கு நீதிமன்றம் நிபந்தனை பிணை ஜாமின்!!!
குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் உள்ளிட்ட 20 விவசாயிகளுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் நிபந்தனை பிணை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் சிப்காட் விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துதலை எதிர்த்து போராடிய விவசாயிகளில் 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் ஏழு பேர் மீது குண்டுதடுப்புச் சட்டம் பாய்ந்த நிலையில், பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் ஏற்பட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஆறு பேர் மீதானகுண்டர் சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் மாவட்ட நீதிமன்றத்தில் 20 விவசாயிகள் சார்பில், பிணை கோரப்பட்டதை தொடர்ந்து, 20 விவசாயிகளுக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியது.
மேலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஏழு விவசாயிகளில், திருவண்ணாமலை மாவட்டச் சேர்ந்த ஆறு விவசாயிகளை தினசரி வேலூர் நீதிமன்றத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, குண்டர் சட்ட வழக்கு வாபஸ் பெறப்படாத அருள் என்பவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலும் தினசரி கையெழுத்திடவும், நிபந்தனை ஜாமின் வழங்கி, திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மதுசூதனன் உத்தரவிட்டார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.