அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் விதைத் திருவிழா..!! அசத்தும் பள்ளி மாணவர்கள்..!!
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என சொல்லுவார்கள், மரம் வளர்பதால் மழை மட்டுமல்ல ஆக்சிஜனும் கிடைக்கும். மரம் வளர்க்கம் வேண்டும் என்ற செயலை அனைவரின் மனதிலும் விதையாக விதைத்தவர் “ஏ.பி.ஜே.அப்துல்கலாம்” அவர் இருந்த பொழுதும் சரி.., அவர் மண்ணை விட்டு மறைந்த பின்னும் சரி பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மரம் வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் விதையை மண்ணில் விதைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை அரியலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் விதைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விதைத் திருவிழாவில், மரபுவகை நெல்கள், கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, குதிரைவாலி, தினை, சாமை, நாட்டுக் காய்கறிகள், கீரைவிதைகள், இயற்கை உணவு, பசுமை நூல்கள் மற்றும் துணிப்பைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், இயற்கை வேளாண் வல்லுநர்கள், வேளாண் துறை வல்லுநர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை முன்னோடி விவசாயிகள் கருத்துரை மற்றும் ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் செய்துள்ளது.
இதனை ஏராளமானோர் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கி செல்கின்றனர்.
Discussion about this post