அதிமுக 40 எம்.எல்.ஏ விவகாரம் சபாநாயக்கர் அப்பாவு அவதூறு வழக்கு..!! நீதிபதி உத்தரவு..!!
கடந்த 2023ம் ஆண்டு சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு அதிமுகவின் தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின் அதிமுக கட்சியில் இருந்து 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய தயாராக இருந்தனர், ஆனால் அதை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டார்..
இந்நிலையில் அதிமுகவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சபாநாயக்கர் அப்பாவு பேசியதாக அதிமுகவின் இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அப்பாவு மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.,
அப்போது அப்பாவு பேசிய வீடியோ ஆதரங்கள் நீதிபதி முன் சமர்பிக்கப்பட்டது., அதனை பரிசீலனை செய்த நீதிபதி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார்..
அந்த வழக்கில் தொடர்புடைய கோப்புகளை எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அந்த வழக்கின் விசாரணையை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
அந்த வழக்கை விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தார்..
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது இந்த விசாரணையில் சபாநாயக்கர் அப்பாவு நேரில் ஆஜராகினார். அப்போது அவர், நீதிமன்ற சம்மனை பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு எனவும், நீதிமன்ற சம்மன் ஏதும் வரவில்லை எனவும், நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளதாகவும், இதுசம்பந்தமாக விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் தெரிவித்தார். பின்னர், வழக்கின் விசாரணையை வருகின்ற செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..