பிக் பாஸில் விஜய் சேதுபதியின் சம்பளம் தெரியுமா..?
விஜய் டிவியில் வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நடந்த 7 சீசங்களும் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 7 சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் ஆனால் தற்போது 8 வது சீசன் வெளியாக உள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு அதிகமான வேலைபளு காரணமாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியாகி உள்ளார்.
அடுத்த சீசனான 8 வது சீசனை யார் தொகுத்து வழங்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. இந்நிலையில் தான் மக்கள் செல்வனான விஜய் சேதுபதி பிக் பாஸின் 8 வது சீசனை தொகுத்து வழங்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ செய்தி வெளியானது.
பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்குவதற்காக கடந்த சீசனில் கமல்ஹாசன் ரூ 130 கோடியை சம்பளமாக பெற்றதாக செய்தி வந்தது. பிக் பாஸின் ஒரு சீசனில் மொத்த 100 நாட்களில் இருந்து வெறும் 15 நாட்களுக்கு மட்டும் வரும் கமம்ஹாசனுக்கு ரூ 130 கோடியாகும்.
இந்நிலையில் வரும் 8வது சீசனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் சம்பளமானது வெளிவந்துள்ளது. அதாவது 8 வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதிக்கு ரூ 60 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
சினிமவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் விஜய் சேதுபதி படத்திற்கு ஏற்ப 8 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் பிக் பாஸில் அவரது சம்பளம் அதிகம் என சொல்லப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே அந்த நிகழ்ச்சியின் புரோமோவும் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் புரோமோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
அடுத்த அக்டோபர் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரங்களில் பிக் பாஸ் சீசன் 8 வது நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.