கலைஞர் நினைவு நாணயம்..! ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!
கலைஞர் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி 100ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. அந்த 100 ரூபாய் சிறப்பு நாணயத்தில் கலைஞர் உருவப்படம் படம் மட்டுமின்றி அவரது கையொப்பமும் இடம் பெற்றிருந்தது.
தமிழ்நாடு அரசின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற, ஒன்றிய அரசு முன்னாள் முதலமைச்சர் “முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி” என்ற பெயரில் அந்த 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட படும் தெரிவித்திருந்தது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் “தமிழ் வெல்லும்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
அதற்கான உத்தரவை ஒன்றிய அரசு கெஜட்டில் வெளியிட இருந்த நிலையில். அதற்கான மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் ஜூலை 13ம் தேதி வெளியிட்டிருந்தது… இந்நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்..
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது “நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர் நமது கலைஞர் அவர்களை என்றென்றும் நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். 5 முறை முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல திட்டங்களால் நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங்கள் தோறும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது
இன்னும் கலையுலகினர், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஒரு சிறந்த தலைவருக்காக நாணயத்தை வெளியிட உத்தரவிட்ட ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..