எஸ்பிஐ வங்கி பெயரில் மோசடி..! ஷாக்கில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்..! உஷார் மக்களே..!
எஸ்.பி.ஐ பரிசு புள்ளிகள் பற்றிய பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் பணமோசடி நடைபெற்று வருகிறது.., அதைப்பற்றி சைபர் க்ரைம் காவலர்களும் மொபைல் எண்ணிற்கு வரும் லிங்களை க்ளிக் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி எஸ்பிஐ வாடிக்கையாளர்களை பேர் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
அது தொடர்பாக சைபர் க்ரைம் காவலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்., “சமீப காலங்களாக ஹாக்கர்ஸ்கள், தனிநபர்களின் மொபைல் போன்களை ஹேக் செய்து, பொய்யான செய்திகள் அனுப்புகிறார்கள்.
பின் போலியான வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தி, பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் எஸ்.பி.ஐ பரிசு புள்ளிகள் பற்றிய பொய்யான செய்திகள் அனுப்பி வாடிக்கையாளர்களை நம்ப வைக்கின்றனர்.
இந்த குழுக்கள் பிரேத்யேகமாக ஐக்கான்கள் மற்றும் “ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா” என்ற இரண்டு பெயரை மற்றும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த பொய்யான செய்திகள், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது வங்கி விவரங்கள் பதிவிடும் போது. அவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் நெட்வொர்க்குகளில் மொபைல் எண் (sim card number) தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது.
மே மற்றும் ஜூன் 2024 மாதங்களில், தமிழ்நாட்டில் இந்த மோசடியுடன் தொடர்பான 73 சைபர் க்ரைம் புகார்கள், உட்பட தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட் போர்ட்டல் இடம் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்..
* உங்கள் சமூக ஊடக கணக்குகளில் தேவையான சரிபார்ப்பை (two-step verification) மூலம். கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கவும். இது உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP க்கு கூடுதல் PIN பாதுகாப்பை தருகிறது.
* தெரியாத எண்களில் இருந்தும் வரும் மெசேஜ் அல்லது லிங்க் போன்றவற்றில் இருந்து கவனமாக இருங்கள்.
* சந்தேகமான லிங்க்களை க்ளிக் செய்யாதீர்கள், மேலும் தெரியாத தொடர்புகளில் இருந்து வரும் APK File அல்லது ஆப்ஸ்-களை பதிவிறக்காதீர்கள்.
* உங்கள் கணக்குகளுக்கு மற்றும் ATM கார்டு, கிரெடிட் கார்டு களுக்கு அடிக்கடி பாஸ்வர்டுகளை மாற்றிக்கொண்டே இருங்கள்.
* உங்கள் சமூக ஊடக குழுக்களில் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள். குழுவின் ஐக்கான்கள் அல்லது பெயர்களில் அனுமதியற்ற மாற்றங்களை கவனித்தால், குழு நிர்வாகிக்கு அறிவிக்கவும் மற்றும் அவசியமென்றால் குழுவிலிருந்து விலகுங்கள்.
* உங்கள் வங்கி விவரங்களை சந்தேகத்திற்குரிய தளத்தில் பதிவிட்டு இருந்தால், உடனே அருகில் உள்ள வங்கிக்கு சென்று அதனை பற்றிய விவரங்களை கேட்டறிய வேண்டும். உங்கள் கணக்குகளை பாதுகாக்க அனுமதியற்ற பரிவர்த்தனைகளை தவிர்பது நல்லது.
இதுபோன்ற சில போலியான நடவடிக்கையில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கு உரிய நடவடிக்கையை நீங்கள் கண்டறிந்தால், சைபர் க்ரைம் மற்றும் குற்ற தொலைபேசி உதவி எண் 1930 ஐ அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகாரளிக்குமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..