“மின்னல் வெட்டி முடித்த பின் இருள் தான் சூழும்..” பிரதமர் மோடியை தாக்கிய பாகவத்..!! பாஜக ஆர்எஸ்எஸ் இடையே வந்த விரிசல்..!!
பாஜகவிற்கும் ஆர்எஸ்எஸ்ற்கு இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனைகள் நிலவி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பல்வேறு விமர்சனங்கள் வர தொடங்கியது.
இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.. “நாம் கடவுளாக மாற வேண்டுமா அல்லது வேண்டாமா என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் கடவுளாகி விட்டோம் என்று நாமே பிரகடனப்படுத்தி கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்தானது பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.., இதனால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு விட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழ தொடங்கியுள்ளது..
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ் அமைப்பு) தலைவராக இருக்கும் மோகன் பாகவத். பாஜகவிற்கு தொடர்ந்து பக்கப்பலமாக இருந்து வந்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை தான் பாஜக செயல்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழதொடங்கியுள்ளது..
இதற்கிடையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்டவர்களுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே மோதல் நிலவியதாக சொல்லப்படுகிறது. அதற்கு உதாரணமாக நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக நிரைவேற்றாமல் போன தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்விகளை எழுப்பி தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர்..
ஆனாலும் அதுகுறித்து பாஜக எந்த விளக்கமும் அளிக்காததால் தற்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய தகவல் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பதை உணர்த்தும் விதமாக தெரிந்துள்ளது..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனேவில் நடதப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மோகன் பாகவத்., பாஜக – ஆர்எஸ்எஸ் இடையேயான விரிசல் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது “அமைதியாக இருந்தால் எதையும் செய்ய முடியாது மின்னலைப் போல எப்போது பிரகாசிக்க வேண்டும் அதை தான் பலரும் விரும்புகிறார்கள் என சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் மின்னல் வெட்டி முடித்த பின்பு இருள் தானே சூழ்ந்து கொள்கிறது..
சேவகர்களான நாம் தீபத்தைப் போல பிரகாசிக்க வேண்டுமே தவிர மின்னலை போல மிளிர தேவையில்லை.., மணிப்பூரில் தொடரும் இந்த பிரச்சனைகள் மிகவும் நெருக்கடியாகவே உள்ளது. அங்கு பாதுகாப்பிற்காக எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. மணிப்பூரில் வசிக்கும் மக்கள் எப்போதும் அச்சத்துடனே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..
அங்கு வாழும் மக்கள் வேலைக்கு செல்வது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. அதனால் சங்க சேவகர்கள் அங்கு அமைதியான சூழலை உருவாக்க முயன்று வருகிறார்கள். என்ஜிஓக்களால் அனைத்து விஷயங்களையும் மேற்கொள்ள முடியாது. எனவே சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்..
அதனை தொடர்ந்து பேசிய அவர் ‛‛நாம் கடவுளாக மாற வேண்டுமா..? அல்லது வேண்டாமா..? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர நாம் முடிவு செய்துக்கொள்ள கூடாது. நாம் கடவுளாக மாறிவிட்டோமே என்று நாமே பிரகடனப்படுத்தி கொள்ள கூடாது” என பேசியுள்ளார்.
இவரின் அந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது ‛‛கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பி வைத்தார். நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, நான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மா. ஏதோ ஒரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியியுள்ளார்” என இவ்வாறே பிரதமர் மோடி பேசியிருந்தார்..
பிரதமர் மோடி தன்னை கடவுளாக உணர்ந்து பேசியதாக பல்வேறு விமர்சனங்கள் எழத்தொடங்கியது. இப்படி பட்ட சூழலில் தான் மோகன் பாகவத் “‛‛நாம் கடவுளாக மாற வேண்டுமா..? அல்லது வேண்டாமா..? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர நாம் முடிவு செய்துக்கொள்ள கூடாது. நாம் கடவுளாக மாறிவிட்டோமே என்று நாமே பிரகடனப்படுத்தி கொள்ள கூடாது” தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..