“டாக்டர் 2 சினிமா வரை” இணையத்தில் கலக்கும் விநாயகர்கள்..!!
இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.., இன்றைய நாளில் வீட்டில் மட்டுமின்றி பல்வேறு பொது இடங்களிலும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்..
குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விநாயகருக்கு சிலைகள் வைத்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.. அப்படியாக ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு விதமான விநாயகர் சிலையை வைத்து மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்..
அப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் கலக்கும் விநாயகர்கள் பற்றி பார்க்கலாம்.. தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதை சரி செய்யும் விதமாக கோயம்புத்தூரில் விநாயகர் மருத்துவர் வேடம் அணிந்து குணமாக்கும் விதமாக வடிமைக்கப்பட்டுள்ளது..
அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் பைக் ஓட்டிக்கொண்டு செல்வதை போல வடிவமைக்க பட்டுள்ளது…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் “தேங்காய் நார்., வாழைப்பழம், மற்றும் வாழைக்காய் மாம்பழம் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளார்…
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்து ஹிட் கொடுத்து அதன் பாகம் 2 வெளியாகவுள்ள படம் தான் புஷ்பா.., அதில் வரும் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தை கொண்ட விநாயகர் சிலை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..
விருதுநகர் மாவட்டத்தில் முருகர்., விநாயகர் மற்றும் சிவன் என அனைவரும் இருக்கும் காட்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..