காவிரி கூட்டு குடிநீர் மற்றும் ஆழ்துளை குடிநீர் வரவில்லை என மக்கள் சாலை மறியல் போராட்டம்…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் 2வது வார்டு பகுதியில், காவிரி கூட்டு குடிநீர் மற்றும் ஆழ்துளை குடிநீர் ஆகிய இரண்டுமே கடந்த 10 நாட்களாக வரவில்லை என புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காங்கேயம் நகராட்சி ஆணையர் கனிராஜ் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.