ADVERTISEMENT
“ஹீமோகுளோபினை அதிகரிக்க கேரட் ஜூஸ்”
நமது உடலில் காணப்படும் அதிகமான பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருப்பது ஹீமோகுளோபின் குறைந்து காணப்படுவது தான்.
பல்வேறு தொந்தரவுகள் வராமல் இருக்க ஹீமோகுளோபின் அளவை முறையாக நம் உடலில் பராமரித்து வரும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஹீமோகுளோபினை அதிகரிக்க கேரட் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சீரகத்தூள் -1 ஸ்பூன்
பால் – ஒரு டம்ளர்
தேவையான அளவு நாட்டு சர்க்கரை
செய்முறை:
கேரட்டை எடுத்து சுத்தப்படுத்தி அதை சிறிது சிறிதாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும் அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள பாலை கலந்து கொள்ளவும்.
அத்துடன் சீரப்பொடியை சிறிது சேர்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சுவைக்கு நாட்டு சர்க்கரை கலந்து கொள்ளலாம்.
சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. இந்த ட்ரிங்கை அன்றாடம் பருகி வந்தால் உடலுக்கு ரொம்ப நல்லது. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
அத்துடன் மேனி மெருகூட்டப்படும். இந்த ஜூசை குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் உங்கள் முகம் பொலிவடைவதை கண்கூட பார்க்கலாம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.