உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலியாக 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இன்றுடன் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடையை விதித்தது.
இதனை தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ரஷ்யாவின் கச்சா எண்ணெய்,எரிவாயு ,நிலக்கரியை அமெரிக்க துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதன்படி,ஒரு கேலன்(4.5லிட்டர்) பெட்ரோலின் விலை 4.173 டாலர்களாக அதிகரித்துள்ளது.
மேலும், இது அடுத்த சில சில நாட்களில் ஒரு கேலன் 5 டாலர்கள் வரை உயரலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவில் ஜூலை 2008 இல் பெட்ரோல் விலை ஒரு கேலன் 4.11 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.