நாடாளுமன்ற அவை ஒத்திவைப்பு…!! இந்தியா கூட்டணி கண்டனம்..!!
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 3-வது வாரத்தில் முதல் நாளில் அலுவல்கள் தொடங்கி மோடி, அதானிக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவை தொடங்கிய உடனே அதானி விவகாரம், சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கட்சிகள் எழுப்ப முற்பட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து நடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் கவுதம் அதானியின் நிதி முறைகேடுகளை முன்வைத்தும், நூதன முறையில், மோடி மற்றும் அதானியுடைய உருவம் பொறித்த முகமூடிகளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அணிந்த படி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதானி மீதான லஞ்ச புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பதற்கு இந்தியா கூட்டணி கண்டனம் தெரிவித்து மோடியும் அதானியும் ஒன்றுதான் என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..