வெற்றியை நோக்கி அடுத்த அடி எடுத்துவைத்துள்ள ஆதித்யா எல்-1..!!
மூன்றாவது முறையாக புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து ஆதித்யா எல்.1 விண்கலம் உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 2 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கல விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து சுற்றுவட்ட பாதையின் உயரம் உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த 5-ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து ஆதித்யா எல்.1 விண்கலம் உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதேபோல் 4வது முறையாக சுற்றுவட்ட பாதையை உயர்த்தும் பணி செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..