ஆவணியில் ஆதவன் வழிபாடு..! இந்த ரசிகருக்கு மட்டும் அதிஷ்டம்..!!
ஆவணி மாதத்தை ஜோதிடத்தில் “சிங்க மாதம்” என அழைப்பார்கள் இந்த மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால்.., இந்த மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மிக முக்கியமான நாள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் முக்கியமாக ஜாதகத்தில் சூரியனின் பலம் குன்றியவர்கள்.., ஆவணி மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் விரதம் இருந்தால்.., உங்களின் பலம் அதிகரிக்கும் அதாவது எதிரிகளை எதிர்கொள்வதற்கான மன தைரியம் மற்றும் உடல் பலம் அதிகரிக்கும்.
இந்த மாதத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்று கிழமை சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு படையல் வைத்து வழிபட்டால்.., உங்களின் உடல் நலம் பெரும், முக்கியமாக ஞாயிற்று கிழமை களில் முடிந்த வரை காயத்திரி மந்திரம் சொல்லி வழிபடலாம்.
அதிலும் சிம்ம ராசியில் பிறந்தவர்கள்.., ஞாயிற்று கிழமை தோறும் சூரிய பகவான் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும் குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும்.
Discussion about this post