சமீப காலமாகவே அதானி குழுமத் தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மிக வேகமாக உயர்ந்து கொண்டே உள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனரை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு கவுதம் அதானி முன்னேறியுள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முன்னேறி உள்ளது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். 155.7 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய மதிப்பில் 12.35 லட்சம் கோடி அவரது சொத்து மதிப்பாக உயர்த்துள்ளது. 273.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதே முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது. அதானி மட்டுமே உலகின் முதல் 10 பணக்காரர்களில் இந்த ஆண்டில் அதிக மட்டும் சொத்து மதிப்பு உயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.