அதானி குழுமம் ஊழல் புகார்..! ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்..!
அமெரிக்காவின் பிரபல “ஷார்ட் செல்லர்” நிறுவனம் என சொல்லப்படும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை அதானி குழுமத்தை உலுக்கியது. அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான “செபி” அதனை 1 வருடதிற்கும் மேலாக விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் செபி தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பை நேரில் வந்து ஆஜராகும் படி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. அது தொடர்பான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அமெரிக்க நேரப்படி ஜூலை 1ம் தேதி தனது இணையத்தில் நீண்ட நெடிய பதிவை செய்தது.
இதுபற்றி ஹிண்ட்பார்க் கொடுத்துள்ள விளக்கத்தில் அவர் கூறியதாவது, செபி அனுப்பியுள்ள 46 பக்க நோட்டீஸ் அதானி பங்குகளை ஷாட் செய்வதற்காக எங்களிடம் விளக்கம் கேட்டது. நாங்கள் ஒரு ஏஜென்ட் முதலீட்டாளர் (investor partner) மூலம் ஒரு ஒப்பந்தத்தை போட்டு கொண்டோம். அதானி பங்குகளை ஷாட் செய்தோம்.
அந்த முதலீட்டு பங்குதாரர், இந்தியாவைச் சார்ந்தவர் அல்ல, அவர் வெளிநாட்டு நிதி அமைப்பின் கீழ் கணக்கை வைத்திருந்தவர். அந்த கட்டமைப்பின் கீழ் தான் அதானி பங்குகள் ஷாட் செய்யப்பட்டது, எனவே ஹிண்டன்பர்க் நேரடியாக அதானி பங்குகளில் ஷாட் செய்யவில்லை என செபிக்கு மட்டும் அல்லாமல் மொத்த உலகிற்கும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது பதிவின் மூலம் விளக்கம் கொடுத்தது.
கோடக் மகிந்திரா வங்கியின் (Kotak Mahendra Bank) உருவாக்கிய ஒரு ஆப்ஷோர் பண்ட் கணக்கை தான் எங்களுடைய முதலீட்டு பார்ட்னர் பயன்படுத்தினார். உதய் கோடாக் தலைமையிலான கோடக் வங்கி தான் இந்த கணக்கை உருவாக்கி, நிர்வாகம் செய்தது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் பின் அதானி குழுமத்தின் பங்குகளை ஷாட் செய்து. அதன் மூலம் லாபம் ஈட்டியது. ஹிண்டன்பர்க் ஏற்றுக்கொண்டது. ஜனவரி 2023ல் அதானி குழுமம் குறித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டபோதே நாங்கள் அதானி பங்குகளை ஷாட் செய்து அதற்கான ஆவணங்களை சமர்பித்தோம்.
இப்படி இருக்க முதலீட்டு பங்குதாரர் உடனான “ஹிண்டன் பெர்க் ரிசர்ச்” செய்ய ஷாட்டிங் மூலம் 4.1 மில்லியன் டாலர் மொத்த வருவாய் ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், அதானி நிறுவனத்தின் அமெரிக்க பத்திரங்களில் தாங்கள் நேரடியாக வைத்திருந்த ஷாட்டிங் பெட் மூலம் வெறும் 31,000 டாலர் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு செபி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஹிண்டன்பர்க் தனது வலைதளப்பதிவில், “இந்த நோட்டீஸ், இந்தியாவில் உள்ள மிக சக்தி வாய்ந்த நபர்களால் செய்யப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை வெளிப்படுத்தும் முயற்சிகளை அழுத்தவும், மிரட்டுவதற்குமான முயற்சி” என்று குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஜனவரி 2023ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கையில், அதானி குழுமம் வரி ஏய்ப்பு, செபியின் விதிமீறல், முறைகேடான நிதி பரிமாற்றம், பங்கு விலையை திட்டமிட்டு விதிகளை மீறி மறைமுகமாக உயர்த்துவது ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதாக சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையின் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு பல பில்லியன் டாலர் அளவில் சரிந்து. பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ